தாவணி பாவடையில் குத்தாட்டம் போட்ட சாய்பல்லவியின் தங்கை.! சாய் பல்லவியையே ஓரம் கட்டுவார் போல இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!!

0

actress saipallavi sister dance video viral: நடிகை சாய் பல்லவி பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார், அதுமட்டுமில்லாமல் சாய்பல்லவி ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயிக்கும் வரை போராடினார்.

மேலும் சாய்பல்லவிக்கு நடனத்தின் மீது தீராத ஆசை அதனால் தான் விஜய் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், மேலும் சாய் பல்லவி தாம் தூம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமல்லாமல் கஸ்தூரி மான் போன்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

பிரேமம் திரைப்படத்தை கல்லூரி படிக்கும்போத விடுமுறை நாட்களில் நடித்துக் கொடுத்தார், இந்தநிலையில் சாய்பல்லவி தனுஷுடன் நடித்த மாரி 2 திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது அந்த திரைப்படத்தில் உள்ள ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி வைரலானது.

சாய்பல்லவிக்கு ஒரு தங்கை இருக்கிறாள், அவர் பெயர் பூஜா கண்ணன் இவர் பாலிவுட் திரைப்படத்தில் உள்ள பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

போற போக்கை பார்த்தால் இவரும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என தெரிகிறது. இவரின் நடனத்தை பார்த்த பல இயக்குனர்கள் சாய்பல்லவியின் தங்கையை படத்தில் நடிக்கவைக்க படையெடத்து விட்டார்கள்.