நடுக்காட்டில் நீரோடையில் அந்தரத்தில் தொங்கும் நடிகை சாய் பல்லவி!! வைரலாகும் புகைப்படம்.

0

actress saipallavi picnic photos viral: என்னதான் இவரது முதல் படம் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்றாலும் அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சாய் பல்லவி என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனைத் தொடர்ந்து இவர் தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமிழில் ஓடிடி நிறுவனங்கள் தயாரிக்கும் ஆந்தொலஜி திரைப்படங்களில் பிரபல இயக்குனருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போதுள்ள இளம் நடிகைகளில் இவர் தான் முன்னணியில் உள்ளார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும் மற்ற நடிகைகளைப போல் இல்லாமல் இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு இவருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பு மட்டுமல்லாமல் இவர் டான்ஸ் அதைவிட பயங்கரமாக இருக்கும் என்பதற்கு சான்றாக மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்தது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இவர் தெலுங்கில் விராட பருவம், லவ் ஸ்டோரி போன்றத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நடுகாட்டில் அந்தரத்தில் தொங்கியவாறு செம ஜாலியாக புகைப்படம் எடுத்துள்ளார், அதோடு நீரோடையின் மேலே தொங்கும் கிளையைப் பிடித்து ஊஞ்சல் ஆடியவாறு எடுத்த புகைப்படம்  ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sai-pallavi--1
sai-pallavi–1
saipallavi.senthamarai
saipallavi.senthamarai
sai-pallavi-3
sai-pallavi-3
sai-pallavi-2
sai-pallavi-2