பிரபல ஹீரோவுடன் சாய் பல்லவி நடிப்பதை ஏற்க மறுக்கும் ரசிகர்கள்!! காரணம் இதுதான்.

0

actress saipallavi next role in chiranjeevi movie: சிறுத்தை சிவா இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம் இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவர்கள் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த திரைப்படத்தை ரமேஷ் இயக்க உள்ளார். மேலும் திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஏ எம் ரத்னமுடன் இணைந்து ராம் சரணும் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கான வேலை பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் நடிகர் சிரஞ்சீவி அவர்கள் வேதாளம் திரைப்படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி மொட்டை அடித்துள்ளார்.

தமிழில் இந்த திரைப்படத்தில் ஹீரோயினை விட தங்கச்சி கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் அவர்கள் நடித்திருப்பார். தெலுங்கு ரீமேக்கில் யார் நடிப்பார் என ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான மலர் டீச்சர் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரியவருகிறது. இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளான தெலுங்கு, மலையாளம் போன்ற  படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

நடிகை சாய் பல்லவி அவர்கள் நடிகர் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க உள்ளார். ஆனால் அவர்களது ரசிகர்களோ சாய் பல்லவியை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என விரும்புகின்றனர். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.