திருமணம் குறித்து நடிகை சாய்பல்லவி எடுத்த முடிவு!! கதறும் ரசிகர்கள்.

0

actress saipallavi decision about her marriage:பிரேமம் என்கின்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகமெங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் மட்டுமல்லாது  தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவரின் அழகு, நடனம், முடி என அனைத்திற்கும்  ரசிகர்கள் அடிமையாகி உள்ளனர். நடிகை சாய் பல்லவியின்  ரவுடி பேபி என்கின்ற பாடல் பட்டி தொட்டியெஙகும் பிரபலமானது. உலகம் முழுவதும் யூடியூப் சேனல்கள் மூலம் வெளியாகி பல மில்லியன் லைக்ஸ் களை பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மேலும் நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர். பிலிப்பைன்சில் இவர் மருத்துவம் படித்துள்ளார். இவர் படித்து முடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் முறையாக மருத்துவராக இந்தியாவில் தேர்வு எழுத வேண்டும்.

அந்த தேர்விற்காக சில வாரங்களுக்கு முன்பு கூட திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு எழுதியுள்ளார். இவருக்கு மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இல்லை பெற்றோர்களின் விருப்பத்திற்காகவே இவர் மருத்துவம் படித்து உள்ளார்.நடனம், நடிப்பு மீது உள்ள ஆர்வத்தினால் இவர் ஒரு நடிகையாக ஆவதயே விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் திருமணம் குறித்து பேசப்பட்ட நிலையில் இவர் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். திருமணத்திற்குப் பிறகு பெற்றோருடன் இருக்க முடியாது என்பதற்காக இவர் திருமணத்தை மறுத்துள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக வர ரெடி என கூறி பதிவிட்டு வருகின்றனர்.