அஜித்தின் ரீமேக் படத்தில் நடிக்க போட்டி போட்டுக்கொள்ளும் சாய்பல்லவி, கீர்த்தி சுரேஷ்!! யார் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தம் நீங்களே சொல்லுங்கள்…

0

actress saipallavi and keerthysuresh competate to act in this character:தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் இரண்டு பேர் தற்போது போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். நடிகை சாய் பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இந்த இரண்டு நடிகைகளுமே வந்த குறிப்பிட்ட காலத்திலேயே தங்களது சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்கள்.

அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த வேதாளம் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தை தமிழில் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் அஜித் அண்ணனாகவும் அவருக்கு தங்கையாக லக்ஷ்மி மேனனும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். இது ஒரு குடும்ப கதை கொண்ட திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தை தற்போது தெலுங்கில் அஜித் கதாபாத்திரத்தில சிரஞ்சீவி நடிக்க உள்ளதாகவும் லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியாஅல்லது கீர்த்தி சுரேஷா என இன்னும் முடிவாகவில்லை. யார் நடிக்க உள்ளார் என விரைவில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தை தெலுங்கு ரீமேக்கில் இயக்குனர் மாஹிர் ரமேஷ் என்பவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் சாய்பல்லவி நடிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.