நேற்று திருச்சி தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவி!! வைரலாகும் வீடியோ!!

0

actress sai pallavi video: நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். மேலும் இவர் ஒரு சிறந்த நடன கலைஞர்.

இவர் விஜய் டிவியில்  2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டடர். நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர்.இவரது பெற்றோர்களுக்காகவே இவர் மருத்துவ படிப்பை படித்துள்ளார்.

இவர் நடிப்பின்  மீது கொண்ட ஆர்வத்தால் மருத்துவத்தை விட்டுவிட்டு நடிக்க ஆரம்பித்தார். நடிகை சாய் பல்லவி ஜார்ஜியாவில் தனது மருத்துவப் படிப்பை 2016 ல் படித்து உள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள் இந்தியாவில் வந்து தேர்வு எழுதி அதனை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

நடிகை சாய் பல்லவி இன்னும் ஒரு மருத்துவராக பதிவு செய்யவில்லை. எனவே அதற்காகத்தான் தேர்வெழுத திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு 1.9.2020 நேற்று தேர்வு எழுத வந்த போது தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.