சிண்ட்ரெல்லா திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ள நடிகை ராய் லட்சுமி!

Actress Roy Lakshmi who played three roles in the movie Cinderella: ராய்லட்சுமி இவர் தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் திரைபடத்திற்கு வருவதற்கு முன் பிரபலமான மாடலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இவர் தமிழ்த் திரைப்பட உலகிற்கு கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, தாம் தூம், நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,  அரண்மனை, காஞ்சனா போன்ற பல்வேறு படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி  இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

நடிகை ராய் லட்சுமி முதன்முதலாக ஹீரோயின் சப்ஜெக்ட் உள்ள படத்தில் நடித்து  இருக்கிறார். மேலும் இப்படத்தை எஸ் ஜே சூரியாவின் உதவியாளரான வினோத் வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தை கோவை சுப்பையா தயாரித்துள்ளார். இந்த சிண்ட்ரெல்லா திரைப்படத்தில் ராய் லட்சுமி மூன்று வேடங்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஒரு சுவாரஸ்யமான பேன்சி பேய் படம் என கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ராய் லட்சுமி அழகான சிண்ட்ரெல்லா வாகவும், இசைக்குழு நடத்தும் பாடகியாகவும், மற்றும் வேலைக்கார பெண் துளசி என மூன்று கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெளிநாட்டு நடிகர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் படம் வெளியிடப்படும் என படக்குழு முடிவெடுத்துள்ளது.

rai-tamil360newz
rai-tamil360newz

 

Leave a Comment