மானே தேனே என்று ஏன் பெண்களை அழைக்கிறீர்கள்.? அதற்கு பதில் இப்படி கூப்பிட்டு பாருங்க.. நடிகை ரோகினி பரபரப்பு பேட்டி

சமீபத்தில் பிரபல நடிகை ரோகிணி  பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட நிலையில் அங்கு பெண்களை மானே தேனே என்று கூப்பிட்டால் உருகி விட வேண்டாம் என பெண்களுக்கு அட்வைஸ் கூறி உள்ளார். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரோகிணி சமீப காலங்களாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பாகுபலி படத்தில் பிரபாஸின் அம்மாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். சினிமாவையும் தாண்டி இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை ரோகிணி சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானதிலிருந்து தற்போது வரையிலும் தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பெண்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் சர்வதேச பெண்களின் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றிய நடிகை ரோகிணி சமூகத்தில் பெண்கள் நிலை அவர்கள் மேல் கொண்ட வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அந்த வகையில் பெற்றோர்கள் ஆண்களுக்கு வழங்கப்படும் கல்வி கட்டணம் நல்ல முதலீடு என்று நினைக்கும் பெற்றோர் பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி கட்டணம் என்பது தேவையற்ற முதலீடு என்ற கருத்தை பகிர்ந்த ரோகினி மேலும் இதனால் நாங்கள் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு பல தகவல்களை பகிர்ந்து கொண்ட ரோகிணி மேலும் பெண்கள் மென்மையானவர்கள் என்றும் ஆண்கள் வலிமையானவர்கள் என்றும் பிடித்து வைத்து அரசியல் செய்யப்படுவதை சுட்டிக்காட்டி அதில் அடக்குமுறை உள்ளதாகவும் இதற்கு பெண்கள் ஆளாகிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மானே தேனே என்றால் பெண்கள் உருகி விட வேண்டாம் என்றும் சிங்கப்பெண்ணே என்று சொல்வதில் என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே பெண்களின் நிலையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என தன்னுடைய பேச்சியின் மூலம் இந்நிகழ்ச்சியை கொண்டு சென்றார்.

Leave a Comment