விக்ரம் திரைப்படத்தில் ஒல்லியாக சுருட்டை முடியுடன் நடித்துள்ள ரோபோ ஷங்கர் மனைவி.!! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

roboshankar1

சின்னத்திரையில் இருந்து பிரபலமடைந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள். அந்தவகையில் தனது காமெடி திறமையினாலும், பல பிரபலங்களின் குரல் பேசும் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ரோபோ ஷங்கர்.

இவ்வாறு இவரின் நடிப்பு திறமையினால் வெள்ளிதிரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் தவிர்க்கமுடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் ரோபோ சங்கரை எங்க படத்தில் நடிக்க வையுங்கள் என்று கூறுமளவிற்கு தற்பொழுது ரோபோ ஷங்கர் சினிமாவில் வளர்ந்துள்ளார். இந்நிலையில் ரோபோ சங்கரின் மனைவி பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் காமெடி ஷோ ஒன்றில் போட்டியாளராக பங்குபெற்று வந்தார்.  பிறகு குக் வித் கோமாளி சீசன் 1-ல் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

நிலையில் பிரியங்கா ரோபோ ஷங்கர் இதுவரையிலும் இவர் வெள்ளித்திரையில் நடிக்காத காரணத்தினால் தான் தொடர்ந்தவர் பல ஷோக்களில் பங்குபெற்று பிரபலமடைந்து வருகிறார் என்று நாம் அனைவரும் நினைத்திருந்தோம்.

ஆனால் பிரியங்கா நடிகை லைலா ஹீரோயினாக நடித்திருந்த திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தரணி இயக்கத்தில் வெளிவந்த  தில் திரைப்படத்தில் லைலா ஐஸ் கிரீம் எப்படி செய்வது என்பது போன்ற சமையல் காமெடி காட்சியில் நடித்திருப்பார்.

அந்தக் காட்சி மற்றும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ப்ரியங்கா மிகவும் ஸ்லிம்மாக  கர்லிங் ஹேர் வைத்து மிகவும் அழகாக இருப்பார்.அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

robo-shankar-wife-priyanka-dhill
robo-shankar-wife-priyanka-dhill