முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு போடோஷூட் நடத்திய ரித்திகா.! வைரலாகும் புகைப்படம்.

0

சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ரித்திகா. இவர் 2013ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த பரதேசி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமா பிரபலங்களின் கண்களில் பட தொடங்கினார் மேலும் அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் காட்டி ரஜினிகாந்த் விக்ரம் போன்ற பல முன்னணி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் குணச்சித்திர நடிகைகளில் முதன்மையானவராக பார்க்கப்பட்டார் இவர் பரதேசி படத்தினைத் தொடர்ந்து நினைத்தது யாரோ, மெட்ராஸ், அஞ்சலை, ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுகன், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டிதொட்டியெங்கும் மேலும் பிரபலமடைந்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு நிலையாக சென்று கொண்டிருந்த இவர் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு மேலும் தனது திறமையை வெளிப்படுத்தி டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். சமீபகாலமாக சரியான கதைகள் வராததால் அவர் சினிமா உலகில் சரியாக காணப்படாமல் இருந்து வருகிறார்.

இருப்பினும் தனது ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள இவரும் தற்பொழுது  மாடர்ன் உடையில் இறங்கிய புகைப்படம் எடுத்துக்கொண்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

riythvika
riythvika
riythvika
riythvika
riythvika
riythvika