அஜித்தை பற்றி பிரபல நடிகை ரேவதி அவர்கள் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். தமிழ் திரை உலகில் தனது கடின உழைப்பினால் தற்போது உச்ச நிலையில் இருப்பவர்.
சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அஜித் அவர்கள் இருந்து வருகிறார் இவரின் திரைப்படம் என்றாலே திருவிழா போல காட்சியளிக்கும் என்பது நாம் அறிந்ததே.

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த விசுவாசம் ,நேர்கொண்டபார்வை போன்ற படங்கள் தல ரசிகர்களை தாண்டி, மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இப்படங்கள் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் அஜித் அவர்கள் நடித்து வருகிறார் இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார். இந்தக் கூட்டணி இதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை அஜித் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர் ஆனால் இப்படத்தில் இருந்து தற்போது எந்த ஒரு தகவலும் வராத நிலையில் சற்று அதிர்ச்சியில் இருந்தனர்.

இந்த சூழ்நிலையில் முன்னணி நடிகையான ரேவதி அவர்கள் அவர்கள் தல அஜித் பற்றி பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் அது என்னவென்றால் அஜித் அவர்களை எனக்கு முன்னரே தெரியும் பாசமலர் என்ற திரைப்படத்தில் அவருடன் நடித்து உள்ளேன் என கூறியுள்ளார் மேலும் அவர் அவரை சிறுவயதிலிருந்து பார்த்து வருகிறேன் அப்பொழுதிலிருந்து விசுவாசம் வரை மிக அழகாக வளர்ச்சி அடைந்து உள்ளார் என கூறியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Leave a Comment