அட இந்த சேனலில் தான் பிக்பாஸ் ரேஷ்மா செய்தி வாசிப்பாளரா இருந்தாரா!! அதுவும் மாடர்ன் உடையிலா!! வைரலாகும் புகைப்படம்..

விஷ்ணு விஷால் மற்றும் நிக்கிகல்ராணி கூட்டணியில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இயக்கப்பட்டதால் இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் இத்திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி ரோலில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா. இத்திரைப்படத்தில் ரேஷ்மா சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தவகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ரேஷ்மா புருஷன் என்ற காமெடி பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது.

ரேஷ்மாவின் தமிழில் இதுதான் இவரின் முதல் திரைப்படமாக இருந்தாலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் 45 நாட்கள் மட்டுமே இருந்தார் ஆனால் இந்த நாட்களுக்குள் தனது வாழ்வில் நடந்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வில்லி கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது கண்ணான கண்ணே சீரியலிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் முதலில் விமான பணிப்பெண்ணாக தான் பணியாற்றி வந்துள்ளார். அதன்பிறகு சினிமா மீது ஆர்வம் இருந்ததால் தொகுப்பாளராக பணியாற்றி தொடங்கியுள்ளார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

reshma 4
reshma 4

அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.  அதோடு பல சீரியல்களிலும் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் திரைவுலகில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.  இந்நிலையில் இவர் செய்தி வாசிப்பாளராக நியூஸ் 7 தொலைக்காட்சியில் தான் பணிபுரிந்துள்ளார் தற்பொழுது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

reshma 5
reshma 5
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment