என் டார்லிங் நயன்தாரா ரொம்ப பாவம்…! விக்னேஷ் சிவன்னிடம் கெஞ்சி கேட்டுக்கொண்ட ரேகா நாயர்.

nayanthara
nayanthara

நடிகராக திரை உலகில் அறிமுகமாகி ஒருகட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பார்த்திபன். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கியும், நடித்தும் ஓடிக்கொண்டிருக்கிறார். பார்த்திபன் அண்மை காலமாக மற்ற படங்களில் நடிப்பதை விட தானே இயங்கும் படங்களில் அதிகம் நடித்து வருகிறார் இவர் கடைசியாக ஒத்த செருப்பு படத்தில் இயக்கி நடித்திருந்தார் அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து  சில வருடம் கழித்து தற்பொழுது இரவின் நிழல் என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் இந்த படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று சிறப்பாக ஓடி கொண்டு இருக்கிறது இந்த படத்தில் பார்த்திபன் உடன் கைகோர்த்து பிரகிடா, பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், சினேகா,  ரோபோ சங்கர், ரேகா நாயர் மற்றும் பல நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப்போன படமாக இருந்தது இந்த படத்தில் நடித்த நடிகைகளும் கொடுக்கப்பட்ட கதாபத்திரத்தில் மிக சூப்பராக நடித்த அசத்தி இருந்தனர். அந்த வகையில் இந்த படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளவர் நடிகை ரேகா நாயர். இவர் தொடர்ந்து இப்பொழுது பேட்டி கொடுத்து வருகிறார் அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்தும் பேசி உள்ளார்.

நயன்தாரா சினிமா உலகில் பல வெற்றிகளை ருசி தெரிந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார். நயன்தாரா குறித்து ரேகா ஐயர் பேசியது நயன்தாரா நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார் அதிலும் குறிப்பாக நிறைய பேர் அவரை ஏமாற்றி உள்ளனர் எப்படியோ கடைசியாக விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நான் அண்மையில் தான் நயன்தாராவையே சந்தித்து பேசினேன்.

நயன்தாராவை இதற்கு முன் பல பேர் ஏமாற்றி உள்ளார்கள் அதை நான் புரிந்து கொண்டேன் நான் விக்னேஷ் சிவனிடம் சொன்னது என்னவென்றால் என் தங்கத்தை பத்திரமா பாத்துக்கப்பா பல இடங்களில் ஏமாற்றப்பட்டு இருக்கிறார் இனி நல்லபடியாக இருக்கட்டும் பார்த்துக்கொள் என கேட்டுக் கொண்டதாக ரேகா நாயர் கூறினார்.