விலங்குகளின் தாகத்தை தீர்க்க சக நடிகர் நடிகைகளுக்கு சேலஞ்ச் விட்ட பிரபல நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

0

தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரெஜினா.  இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம்,சரவணன் இருக்க பயமேன், சக்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து சினிமாவில் தனது முத்திரையை பதித்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் விஜய் சேதுபதி மற்றும் பவானி ஷங்கர் போலவே 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது பார்ட்டி, கள்ளபார்ட், கசட தபற, சூரப்பனகை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் நீர் சறுக்கு விளையாட்டிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு போட்டியில் கலந்துகொண்டு பரிசை தட்டிச் சென்றார்.

இந்நிலையில் ரெஜினா கையில் ஒரு குவளையில் தண்ணீர் வைத்துள்ளது போல 2021 இருக்கானா வாட்டர் பவுல் சேலஞ்சை அழைப்பது போல தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு தனது வீட்டின் மொட்டைமாடி, வாசப்படி, தெருக்கள் என பலவற்றில் ஒரு பௌலில் தண்ணீரை விலங்குகளுக்கு தாகம் தீர்ப்பதற்க்காக வைத்துள்ளார்.

கோடைகாலத்தில் மிகவும் அதிக வெயில் அடிப்பதால் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தாகம் தீர்க்க வேண்டும். அந்த சேலஞ்ச் இருக்கு நீங்களும் வந்து என்னுடன் விளையாடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார்.  இந்நிலையில் தற்போது ரெஜினா ஒரு பவுலில் விலங்குகளுக்கு தண்ணீர் வைக்கும் புகைப்படம் மற்றும் ட்ரீட் ஆகியவை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

rejina
rejina

அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த பல ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று இவருக்கு பாராட்டுகளை கூறி வருகிறார்கள். இவருடைய ரசிகர்கள் இவரை தலைமேல் தூக்கிவைத்து ஆடி வருகிறார்கள்.