அட நம்ம ராதிகாவா இது இப்படி நரைத்த முடியுடன் வயதான தோற்றத்தில் இருப்பது.!!வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்.!

1980-90 காலகட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கியவர் நடிகை ராதிகா. இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிறகே தற்போதெல்லாம் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராதிகா வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்து வந்தார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

தற்பொழுது சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சீரியலின் பாதியிலேயே சின்னத்திரையில் இருந்து விலகிவிட்டார். இவர் ஏன் சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்பது தெரியாமல் பலர் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

அந்த வகையில் தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பின்போது வெள்ளை முடியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

rathika 3
rathika 3

Leave a Comment