அட நம்ம ராதிகாவை இது 58 வயதில் என்னமா போஸ் கொடுத்துள்ளார்.! மெர்சலான ரசிகர்கள்

சினிமாவில் பொதுவாக நடிகைகள் குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் தொடர்ந்து முன்னணி நடிகைகளாக வலம் வர முடியும். அதன் பிறகு தங்களது அழகு மற்றும் இளமை குறைந்தவர்கள் குணச்சித்திர வேடங்களிலும், அம்மா கேரக்டர்களிலும் நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் நடித்து முடித்துவிட்டு சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்து சின்னத்திரையிலும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.  அந்த வகையில் இந்த இரண்டு விஷயங்களை செய்து தற்போது மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை ராதிகா.

இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.  இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து சினிமாவில் தனது முத்திரையைப் பதித்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து தற்போது வரையிலும் பிசியாக இருந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் வாணி ராணி, செல்லமே, கடைசியாக சித்தி-2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது இவர் சின்னத்திரையில் இருந்து விலகிவிட்டார். ஏனேன்றால் மலையாளத்தில் ஒரு திரைப் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து வருவதால் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் சீரியல்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் தற்போது வரையிலும் ராதிகாவிற்கு 58 வயதானாலும் அழகு குறையாமல் ஷார்ட் ஹேர், டீசர் என்று மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் வாயடைத்துப் போய் உள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment