60 வயதிலும் அரை டவுசர் உடன் உலா வரும் ராதிகா.. நடிகர் ரகுமான் கமெண்டால் ஆர்வமுடன் பார்க்கும் ரசிகர்கள்

நடிகை ராதிகா சரத்குமார் வெளிநாட்டிற்கு சுற்றுலா பயணம் சென்றிருக்கும் நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அரை டவுசரை அணிந்துக் கொண்டு கடலுக்கு அருகே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இவ்வாறு இதனை அடுத்து ராதிகா சரத்குமாரின் புகைப்படத்தை பார்த்த ரகுமான் ஆர்வத்துடன் கேள்வி கேட்ட கேள்விதான் ரசிகர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகவேள் எம் ஆர் ராதாவின் வாரிசாக கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இதனைத் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் நடிகர் பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இவரை அடுத்து ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவரையும் விவாகரத்து பெற்று பிறகு 2001ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

தற்பொழுது வரையிலும் சரத்குமார் உடன் வாழ்ந்து வரும் இவர் அதே அளவுக்கு திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசு, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என தொடர்ந்து பல ஹிட் சீரியல்களை கொடுத்து வருகிறார்.

இவ்வாறு இத்தனை காலங்களாக நடிகை ராதிகாவை சேலையில் பார்த்த நிலையில் வெளிநாட்டிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இவர் திடீரென அரை டவுசரில் அட்டகாசமான போட்டோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் கூலாக செம்மையாக போஸ் கொடுத்திருப்பதனால் இதனை பார்த்து ஆச்சரியமடைந்த நடிகர் ரகுமான் கமெண்ட் பக்கத்தில் கேட்டுள்ள கேள்விகள் தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

rathika
rathika

கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ரகுமான் ராதிகாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு தனியா போய் இருக்கீங்களா? யாரும் கூட வரலையா? என அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு நிலையில் இதனை ஏகப்பட்ட பேர் ட்ரோல் செய்து வருகிறார்கள். இவ்வாறு ராதிகாவை தனியாவா போயிருக்கீங்க என ஏன் ரகுமான் இவ்வளவு சீரியஸாக கேட்கிறார் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment