என் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது இந்த திரைப்படம் தான்.! ராதிகா மனமுருகி வெளியிட்ட பதிவு

rathika
rathika

பாக்கியராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா.  இவரின் எதார்த்த காமெடி திறமையினால் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் தமிழ்,தெலுங்கு என பல திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.  இந்நிலையில் ராதிகா வெள்ளித்திரையில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் கூட சித்தி-2 சீரியலில் நடித்து வந்தார். ஆனால் மலையாள திரை படத்தில் தற்போது நடித்து வருவதால் இந்த சீரியலின் நடிப்பதை நிறுத்தி விட்டார்.  இப்படி சினிமாவில் ஒரு நடிகை முன்னணி நடிகையாக வலம் வந்தால் அவரின் மீது சர்ச்சை ஏற்படுவது வழக்கம்.

அந்த வகையில் இவரின் மீதும் பல சர்ச்சைகள் ஏற்பட்டது அதோடு மட்டுமல்லாமல் இவரின் வாழ்கையிலும் பல பிரச்சனைகளை சந்தித்தார். இரண்டு பேரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு இறுதியாக தற்போது நடிகர் சரத்குமாரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ராதிகா தனது பழைய நினைவுகளை அனைவரிடமும் பகிர்ந்துள்ளார். அதாவது 40 வருடத்திற்கு முன்பு நடிகர் சிரஞ்சீவி உடன் இணைந்து நியாயம் காவாலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாகவும் இத்திரைப்படம் தான் என்னை  முழுமையாக ஒரு நடிகையாக மாற்றியது என்று கூறி அத்திரைப்படத்தின் பொழுது நடிகர் சிரஞ்சீவி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

rathika movie
rathika movie