நடிகை ராசி கண்ணாவுக்கு மிகவும் பிடித்த தமிழ் சினிமா நடிகர், நடிகை இவர்கள் தானாம்.! கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்.

சினிமா உலகிற்கு அடி எடுத்து வைக்கும் நடிகைகள் பலரும் சினிமாவை தெரிந்து கொள்வதற்கு முன்பாக ரசிகர்களை புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு ஏற்றவாறு நாம் சற்று கவர்ச்சி காட்டினால் போதும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் நடிகை ராசி கண்ணா தெலுங்கு சினிமா ரசிகர்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது ஆடைகளை வைத்துக்கொண்டு நடித்ததால் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தெலுங்கு சினிமாவில் வைத்துள்ளார்.

இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் இயக்குனர்கள் இவரை தமிழ் சினிமா பக்கம் தட்டி தூக்கினார் அந்த வகையில் இவர் அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து தற்போது பிரபலமாகி உள்ளார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் தமிழில் வெளிவர இருக்கின்றன.

அந்த வகையில் அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கே பட்ஜான் போன்ற படங்கள் வெளியாக உள்ளன. அதையும் தாண்டி அவ்வப்பொழுது ரசிகர்களின் மனநிலையை தெரிந்துகொள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவ்வப்போது ரசிகருடன் உரையாடுவது வழக்கம்.

அந்த வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ராசி கண்ணாவிடம் தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் நடிகை யார் எனக் கேட்டனர். அதற்கு எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் என்றும் பிடித்த நடிகை நயன்தாரா என்றும் வெளிப்படையாக அவர் கூறினார் இச் செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment