தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இதுவரையிலும் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் ஹீரோயினாக நடித்ததில்லை.
ஆனால் இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்திருந்த கீத கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
தற்பொழுது இவர் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்கிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் இவரை எக்ஸ்பிரஷன் குயின் என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.
இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தமிழ் திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்ததால் அனைத்து தமிழ் ரசிகர்களும் எப்போது இவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று ஆவலுடன் காத்து வந்தார்கள். அந்த வகையில் அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது கார்த்திக் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் கொண்டை போட்டுக் கொண்டு சைட் ரோஸ் வைத்துக்கொண்டு மிகவும் அழகிய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மறைந்த ஸ்ரீதேவியை போலவே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
