நடிகர் கார்த்திக் நடிப்பில் தமிழில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் பிறகு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு தமிழ் சினிமாவை விட மலையாளம், பாலிவுட் என பிசியாக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில் அந்த படத்தினை மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்துள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது தற்பொழுது ஜீவி பிரகாஷ் இசையில், நிதின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆகவும் மேலும் வெங்கி குடுமலா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கும் #VNRTrio திரைப்படம் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக துவங்கி உள்ளது. இந்த படத்தினை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தொடங்கி வைத்திருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருட்ச அளவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகவும் கலக்கலப்புடன் நகைச்சுவை, வேடிக்கை மிகுந்த சுவாரசியமான படமாக உருவாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் துவக்க விழா நடைபெற்ற நிலையில் அது குறித்த வீடியோவை பட குழு சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. அதில் முதல் காட்சியை மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் போட்டு அடிக்க இயக்குனர் பாபி கேமராவை ஸ்விட்ச் ஆன் செய்கிறார். பிறகு கோபிசந்த் மலினேனி முதல் காட்சியை இயக்கினார். மேலும் ஹனு ராகவபுடி மற்றும் புச்சிபாபு சனா ஆகியோர் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க, சாய் ஸ்ரீராம் ஒலிப்பதிவு செய்ய, பிரவீன் புடி பட தொகுப்பாளராகவும், ராம்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.