தெலுங்கு சினிமாவின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்திலும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்தவகையில் விஜய்தேவரகொண்டானுடன் இணைந்து கீதகோவிந்தம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது உள்ள இளைஞர்களின் ஃரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பேசும் பொழுதே முகத்தில் பல பாவனைகளை வெளி காட்டுவதால் எக்ஸ்பிரஷன் குயின் என்ற பெயருடன் பலரை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தொடர்ந்து தெலுங்கில் மட்டும் நடித்து வந்ததால் தமிழ் ரசிகர்கள் இவர் எப்பொழுது தமிழ் நடிப்பார்கள் என்று ஏங்கி வந்தார்கள். இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது கார்த்திக் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை போட்டு வரும் சுல்தான் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த தமிழர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பல எக்ஸ்பிரஷன் செய்து இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் உங்களை எக்ஸ்பிரஷன் குயின் என்று நாங்க சொல்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
