குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியான ராஷ்மிகா மந்தனாவின் இளம் வயது புகைப்படம் – அப்பவுமே செம்ம சுட்டி தனமாக தான் இருந்து இருக்காங்க..

சினிமா உலகில் சென்டிமென்ட், ஆக்ஷன் போன்ற படங்களில் ஒரு நடிகையை தனது திறமையை வெளிப்படுத்துவதை விட காதல், ரொமான்ஸ் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய போதும் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

அதை சரியாக உணர்ந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் காதல், ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து மக்களின மனதில் இடம் பிடித்து உள்ளவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் இதுவரை நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் நடிகை ராஷ்மிகா மந்தனா அங்கு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

போதாத குறைக்கு தற்போது டாப் நடிகர்களுடன் கைகோர்க்கும் ஆரம்பித்துள்ளார். இதுவரை அவர் டியர் காம்ரேட், கீத கோவிந்தம், ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது மஜ்னு மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் “புஷ்பா” முதல் பாகத்தில் அவருக்கு ஜோடியா ராஷ்மிகா மந்தனா  நடிக்கிறார்.

இப்படி தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் வெற்றியை குவித்து வரும் இவருக்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன ஒரு பக்கம் இவரது சிறந்த நடிப்பு என்றால் மறுபக்கம் இவரது அழகு மற்றும் துரு துரு -ன்னு இருப்பது தான் காரணம் அதனால் அவருக்கு அனைத்து மொழி இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் தூக்கி வருகின்றனராம்.

தமிழில் நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்து “சுல்தான்” திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் தமிழ் சினிமா பக்கம் கிடைக்காமல் இருப்பதால் தற்பொழுது மற்ற மொழிகளில் வலம் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

Leave a Comment