யுவனுடன் ஆட்டம் போட்ட நடிகை ரஷ்மிகா மந்தனா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.

தமிழ் திரையுலகில் இசை ஜாம்பவனாக வலம் வருபவர் இளையராஜா இவரைத் தொடர்ந்து இவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தற்போது முன்னணி இசையமைப்பாளராக சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசை அமைத்து தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்டு வலம் வருகிறார் மேலும் அஜித்தின் புதிய படமான வலிமை திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு பக்கம் வலம் வந்தாலும் ஆல்பம் சாங் களையும் அப்போது தயாரித்து வெளியிட்டு வருகிறார் யுவன் சங்கர் ராஜா அந்த வகையில் இவரும், நடிகை ரஷ்மிகா மந்தனாவும் இணைந்து புதிய வீடியோ சாங் ஒன்றில் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.

அதன் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர் மத்தியில் வைரலானது தொடர்ந்து தற்போது அதில் ஆடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment