பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் அரைமணி நேரம் வந்து போக கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட – நடிகை ராஷ்மிகா மந்தனா.

rashmika-mandanna
rashmika-mandanna

கன்னட பெண்ணான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். அதிலும் குறிப்பாக முதலில் காதல் சம்பந்தப்பட்ட படங்கள் இவருக்குப் பெயரையும்,புகழையும் பெற்றுத் தந்ததோடு ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை தக்க வைத்துக் கொள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா டாப் நடிகர்களின் படங்களில் கிளாமர் மற்றும் திறமையை காட்டி நடித்து அசத்தி வருகிறார் ஏன் அண்மையில் புஷ்பா திரைப்படத்தில் கூட நடிகர் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து படம் முழுவதும் சற்று கிளாமராக நடித்து அசத்தினார் இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளாராம். ஆரம்பத்தில் இரண்டு கோடியை சம்பளம் வாங்கிய ராஷ்மிகா மந்தனா புஷ்பா திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இனி ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் கியாரா அத்வானி மற்றும் பல  டாப் நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர் இந்த படத்தில் அரை மணி நேர காட்சிகளில் நடிக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

அந்த அரை மணி நேரத்திற்கு மட்டுமே சுமார் ஒரு கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதை அறிந்தால் தெலுங்கு சினிமா அரை மணி நேரம் வந்து போவதற்கு மட்டுமே ஒரு கோடியா இது எல்லாம் அநியாயமான இருக்கு என மறைமுகமாக புலம்பி வருகிறதாம்.