கிராமத்தில் கோழிகளை கொஞ்சி விளையாடும் ரம்யா பாண்டியன்… வைரலாகும் புகைப்படம்.

ramya pandiyan 009
ramya pandiyan 009

கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து சொல்லும் அளவிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆனால் இந்தத் திரைப்படங்கள் ஓரளவிற்கு பிரபலத்தை தந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இப்படிப்பட்ட நிலையில்தான் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் என்ன நடந்தாலும் சிறு புன்னகையுடன் இருந்து வந்ததால் ரசிகர்கள் அனைவரும் விஷ பாட்டில் உள்ளிட்ட பலவற்றையும் சொல்லி ரம்யா பாண்டியனை கிண்டல் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளதாகவும் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் சூரியா சொந்தமாக தயாரிக்க உள்ள வாணிபூஜன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் வாரத்திற்கு இரண்டு முறையாவது போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன்மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் வட கோழி ஒன்றை கையில் வைத்துக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

ramya pandiyan009
ramya pandiyan009