ஆடை அமலாபாலையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு வித்யாசமாக ஆடை அணிந்த ரம்யா பாண்டியன்!! வைரலாகும் புகைப்படம்.

சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளவர்தான் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து சமுத்திரக்கனிவுடன் இணைந்து ஆண்தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருந்தாலும் ரம்யா பாண்டியன் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பிரலமானதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார் இதன் மூலம் பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் இவர் என்ன நடந்தாலும் நக்கலாக சிரித்து வந்ததால் ரசிகர்கள் இவரை விஷ பாட்டில் உள்ளிட்ட பலவற்றையும் சொல்லி கிண்டல் செய்து வந்தார்கள்.  இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ரம்யா பாண்டியன் சூர்யா தயாரிக்கவுள்ள ஒரு திரைப்படத்தில் வாணிபூஜனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார் இதனை தொடர்ந்து மற்றொரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

தற்பொழுது லாக் டவுன் என்பதால் வாரத்திற்கு இரண்டு முறையாவது வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் அதை விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி தொடை தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ramya pandiya 10
ramya pandiya 10

Leave a Comment