வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு விருந்து வைத்த ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்..

Actress Ramya pandiyan: சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதன் மூலம் இவர்களுக்கென ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கி விடுகிறது.

அப்படி தனது ஹாட் போட்டோ ஷூட் மூலம் சினிமாவில் வளர்ந்திருப்பவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தற்பொழுது வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் இவருடைய அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன் இதற்கு முன்பு ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு ரீச் கிடைக்கவில்லை.

இதன் காரணத்தினால் இவரும் மற்ற நடிகைகள் போல் தனது இடுப்பழகை காமித்து போட்டோ ஷூட் நடத்த ஆரம்பித்தார். எனவே ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ஒரே இரவில் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இப்படிப்பட்ட நிலையில் தான் இவருக்கென தனி ஒரு ஆர்மி உருவானது.

ramya pandiyan

இவ்வாறு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியனை சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்பற்றி வருகிறார்கள். அப்படி இவர் வெளியிடும் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள், ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை வைரலாகுவது வழக்கம்.

ramya pandiyan

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக சேலை காஸ்டியூமில் கோவிலுக்கு சென்று அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்திய உள்ளார். அதில் கோவில் கோபுரம் அருகே இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை இன்ஸ்ட்டாவில் பதிவு செய்ய ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் அதில் வெள்ளிக்கிழமை மாலை முழுவதும் பாசிட்டிவ் என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார்.

ramya pandiyan

Leave a Comment

Exit mobile version