தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரும் நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை ரம்யா பாண்டியன் மிகவும் அழகாக பாவாடை தாவணியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு கிடைத்து வருகிறது நடிகை ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இதனை தொடர்ந்து இவருக்கு சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு பிரபலமடைந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்று நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு குவியும் என எதிர்பார்த்த இவருக்கு சில படங்களில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த வருகிறது.

இதன் காரணமாக தொடர்ந்து சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவது சில நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பது போன்று படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வைரலானது.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாவாடை தாவணியில் மிகவும் அழகாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் புன்னகையுடன் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அதிகபடியான லைக்குகளையும் கமாண்டுகளையும் பெற்று வருகிறது.
