தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா நம்பீசன். இவர் குள்ளநரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் குடும்ப குத்துவிளக்காக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு கவர்ச்சியிலும் கொஞ்சம் ஆர்வம் காண்பித்து சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இவர் பீட்சா, சேதுபதி, டமால் டுமீல் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு இவர் நடிப்பதையும் தாண்டி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு மிகவும் சினிமாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
மிகவும் முக்கியமாக சேதுபதி திரைப்படத்தில் இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்ததால் தற்போது உள்ள இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியின் தொகுப்பாளரான ரியோ ராஜுவுடன் இணைந்து பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஊரடங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தற்பொழுது தான் மீண்டும் இத்திரைபடத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீட்டிலேயே இருந்து வந்த ரம்யா நம்பீசன் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது புடவையில் குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
