ஆளே அடையாளம் தெரியாமல் செம ஸ்டைலிஸ் லுக்கில் பாப் கட்டிங் போட்டு கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்

0

Ramya nambeesan Latest photos:  நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு, இது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஏனென்றால் இதற்கு முன் கேரளாவில் இருந்து வந்த அசின், நயன்தாரா என அனைவரும் முன்னணி நடிகை லிஸ்டில் இணைந்து விட்டார்கள்.

அந்தவகையில் ரம்யா நம்பீசனுக்கு தனி இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது நடிகை ரம்யா நம்பீசன் திரைப்படத் துறையில் முதன் முதலில்  1996 ஆம் ஆண்டு காந்த புருஷன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழில் 2005ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார், அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அதன்பிறகு ஆட்டநாயகன், ட்ராபிக், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா ஆகிய திரை படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார், ஆனால் இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பின்பு விஜய்சேதுபதியின் விஜய்சேதுபதி திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இவர் நடிப்பது மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணி பாடகி என பல திறமைகளை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார், சமீபகாலமாக இவர் நடிப்புக்கு மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்படியாவது அடுத்தடுத்த பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது, இந்த நிலையில் ரம்யா நம்பீசன் தற்பொழுது செம மாடலாக பாப் கட்டிங் போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ramya nambeesan-tamil360newz
ramya nambeesan-tamil360newz
ramya-nambeesan-tamil360newz5
ramya-nambeesan-tamil360newz5