கதாநாயகியாக களம் இறங்குவதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரம்யா நம்பீசன்..!

0
ramya nambeesan-1
ramya nambeesan-1

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு தற்போது பிரபல நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் திரிஷா சமந்தா சாய்பல்லவி என பல நடிகைகளை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இதனை தொடர்ந்து நடிகை ரம்யா நம்பீசன் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன் முதலாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தொலைக்காட்சியிலும் பணியாற்ற ஆரம்பித்தார்.

அந்தவகையில் இவர் நயன்தாரா பணியாற்றிய கைரலி என்ற அது மலையாள தொலைக்காட்சியில் தான் நமது ரம்யா நம்பீசன் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு நாள் கனவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

என்னதான் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானாலும் இதற்கு முன்பாக ஸ்ரீகாந்த் சோனியா அகர்வால் போன்றவர்கள் நடித்த திரைப்படம் ஒன்றில் ரம்யா நம்பீசன் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார்.

ramya nambeesan-1
ramya nambeesan-1

அதேபோல நமது நடிகை பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சேரன் அவர்கள் நடிப்பில்  கல்யாண ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். ஆனால் இவர் முதலில் கதாநாயகியாக அறிமுகமானது தமிழில் வெளியான ஆட்டநாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் தான்.

ramya nambeesan-1
ramya nambeesan-1

இந்த திரைப்படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் பீட்சா சேதுபதி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நமது நடிகை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றி உள்ளார். மேலும் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலை துவங்கியது மட்டுமில்லாமல் அதில் பாடல் நடனம் கலை என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறாராம்.