“படையப்பா” படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்ததற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் – வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஹீரோயின்னாக தனது பயணத்தை ஆரம்பித்த இருந்தாலும் ஒரு கட்டத்தில் சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்காததால் தென்னிந்திய சினிமா உலகில் எந்த விதமான கதாபாத்திரம் கிடைத்தால் அதில் தனது திறமையைக் காட்ட முடிவு செய்தார்.
இளம் வயதிலேயே நடிகை ரம்யா கிருஷ்ணன்.

சினிமாவுலகில் இதையடுத்து எந்த கதாபாத்திரமாக  கொடுத்தாலும் இதற்காக பெரிதும் கஷ்டப்பட்டு அந்த கதாபாத்திரங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக தமிழில் இவ்வாறு ரஜினி விஜயகாந்த் சரத்குமார் போன்ற அட்டாக் நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன.

அண்மையில் கூட பாகுபலி 1, 2 படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இந்திய அளவில் பிரபலமடைந்தார் அதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து கொண்டுதான் இருக்கிறது. ரம்யா கிருஷ்ணனுக்கு வெள்ளித்திரையில் எப்படி வாய்ப்புகள் குவிந்தது அதுபோல  சின்னத்திரையிலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அண்மையில் கூட உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 ல் ஒரு வார எபிசோட் இவர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் 1999ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் படையப்பா இந்த படத்தில் நீலாம்பரியாக நடித்ததை விட வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு வில்லத்தனமான நடிப்பில் அசத்தியிருந்தார் சொல்லப்போனால் ரஜினிக்கு ஏற்ற வில்லியாக ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் மிரட்டும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் 1999ஆம் ஆண்டு எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த படத்திற்காக சுமார் 11 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment