நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த நடிகர் மீது தான்” கிரஷ்”.! அவரே கூறியுள்ளார்.

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதே சமயம் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவது வழக்கம் அந்த வகையில் சினிமா உலகில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடைபெற்ற பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் இதுவரை ரஜினி, கமலஹாசன் விஜயகாந்த் பிரபு விஜய் சேதுபதி சூர்யா  விஷால் பிரபாஸ் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் ஹீரோயின்னாக நடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் குணச்சித்திர கதாபாத்திரம் வில்லி போன்ற வாய்ப்புகள் கிடைத்ததால் அதிலேயும் நடித்து பிரபலமடைந்தார்.

அதில்  ஒரு சில திரைப்படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பேவரைட் திரைப்படங்களாக இருக்கிறது அந்த வகையில் படையப்பா, பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களில் மிரட்டி இருக்கிறார் இந்த படங்களை தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது உருவான திரைப்படம் தான் லைகர்  இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டன் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கூட சூப்பர் ஸ்டார்  ரஜினியுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ஆனால் இந்த படத்தில் அவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்து மட்டும் சரியாக தெரிவிக்கப்படவில்லை. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு யார் மீது கிரஷ் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டுள்ளனர்.

அதற்கு அவரை வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது நான் சினிமா உலகில் பல நடிகர்களுடன் நடிக்க இருக்கிறேன் ஆனால் எனக்கு ரொம்பவும் பிடித்த அந்த நடிகர்  வேறு யாரும் அல்ல நடிகர் நாகார்ஜுனா என கூறியுள்ளார். இச்செய்தி தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version