அந்த இயக்குனருக்கு ரம்யா கிருஷ்ணன் அப்படியாமே.! வெளியான ரகசியம்

90 காலகட்டத்தில் சினிமாவில் கதாநாயகியாகவும்,கவர்ச்சி நடிகையாகவும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவரின் வசீகரமான உடல் அமைப்பால் பல கவர்ச்சியான படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே சினிமாவில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வந்தார்.  இப்படிப்பட்ட நிலையில் தான் தனது கவர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பிறகு இவர் கவர்ச்சியான திரைப்படங்களில் நடித்து வந்தார்.அந்த வகையில் இவரின் சினிமா வாழ்க்கைக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த ஒன்று கேப்டன் பிரபாகரன்.

இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். அதன்பிறகு தொடர்ந்து ரஜினி நடிப்பில் நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் மாறி மாறி படித்து வந்தார்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன்  தற்பொழுது வரையிலும் சினிமாவில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் 2005ஆம் ஆண்டு தெலுங்கில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அந்தவகையில் கிருஷ்ண வம்சி இதற்கு முன்பு ஒருவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவராவார். இரண்டாவது மனைவியாக நடிகை ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்து உள்ளார். ஆனால் இதுவரையிலும் ரம்யா கிருஷ்ணன் அவரது இரண்டாவது மனைவி என்பது யாருக்கும் தெரியாது அனைவரும் முதல் மனைவி என்று தான் நினைத்து வருகிறோம்.இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment