இயக்குனர் தொல்லை தாங்க முடியாமல் ஓடிய நடிகை.! அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன்.. மிஸ்கின் செய்த வேலை

ramya-kirushnan
ramya-kirushnan

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மூத்த நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். தனது 14 வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நிலையில் தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இவ்வாறு தனது சிறு வயதிலேயே நடிகை ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக அறிமுகமானதால் இவருடைய முதல் படம் சொல்லும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனை அடுத்து பாண்டியனுக்கு ஜோடியாக முதல் வம்சம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் இவருடைய கேரக்டர் பலராலும் பாராட்டப்பட்டது.

இதன் பிறகுதான் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார் எனவே இந்த வெற்றினை  பயன்படுத்திக்கொண்ட ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான இவர் முக்கியமாக தமிழில் ரஜினி உடன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

நீலாம்பரி என்ற கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் தற்பொழுது வரையிலும் இவருடைய இந்த கேரக்டர் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார் இதுவும் பெரும் ஹிட் கொடுத்தது இவ்வாறு தற்பொழுது வரையிலும் தனது மார்க்கெட்டை இழக்காமல் சினிமாவின் உச்சத்தில் இருந்து வரும் ரம்யா கிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது. இந்த படத்தில் முதலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக வேறு ஒரு நடிகை தான் நடிக்க வைத்துள்ளார் ஆனால் அந்த இயக்குனர் படாத பாடுப்படுத்தியதால் தொல்லை தாங்க முடியாமல் அந்த நடிகை பாதிலேயே படத்தை விட்டு ஓடி விட்டாராம் எனவே அதன் பிறகு தான் இயக்குனர் ரம்யா கிருஷ்ணனிடம் கதையை கூறியுள்ளார் கதையைக் கேட்டு விட்டு நன்றாக யோசித்து விட்டு இவரும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் படப்பிடிப்பின் பொழுது இயக்குனர் ரம்யா கிருஷ்ணனை கடுமையாக வேலை வாங்கி உள்ளார் எனவே இதனால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பை விட்டு சென்றுவிடலாம் என முடிவெடுத்தாராம் அதன் பிறகு அங்கு இருந்த மிஸ்கின் அவருக்கு ஆறுதல் கூறி படத்தில் நடிக்க வைத்தாராம் இவ்வாறு இதனை சமீப பேட்டியில் சேயர் பாலு கூறியுள்ளார்.