52 வயதினையும் தன்னுடைய அழகினால் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வரும் ராஜ மாதாவின் புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் புதிதாக இவர் நடத்திய போட்டோ சூட் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் லைக்குகளை வாங்கி வருகிறது. இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்ததோ அதேபோலவே பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் ராஜமாதவாக இவர் நடித்தது உலக அளவில் புகழை தேடி தந்தது. இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றிய வருகிறார். மேலும் கமலுக்கு பதிலாக ஒரு சில வாரங்கள் பிக்பாஸ் எபிசோட்டையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 51 வயதை தாண்டியும் நடிகை ரம்யா கிருஷ்ணன் எப்பொழுதும் போலவே இளமையாக தன்னுடைய அழகினை வெளிப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


அந்த வகையில் தற்பொழுது இவர் புடவையில் அழகாக இருக்கும் இவருடைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் இதுவரையிலும் 260 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
