அழகில் ரம்பாவை மிஞ்சும் மகள்.! வைரல் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் நடித்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ரம்பா. தனது வசீகரமான உடலமைப்பு, சிறந்த நடிப்பு போன்றவற்றின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் தற்போது வயதான காரணத்தினால் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா தனது மகள்களின் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது இவருடைய மூத்த மகளின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். உழவன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரம்பா பிறகு தமிழில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இதனை அடுத்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக நடித்த நிலையில் தொடர்ந்து மாபெரும் வெற்றினை கண்டு வந்தார். இவ்வாறு தொடர்ந்து பிசியாக நடித்து வந்த இவர் பிறகு மேஜிக் புக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் அம்பாசிடராகவும் மாறினார்.

அந்த நட்பின் அடிப்படையில் அதன் உரிமையாளர் இந்திரகுமார் பத்மநாதனை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இதனை தொடர்ந்து தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் சில காலங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

lavanya
lavanya

எனவே தற்போது ரம்பா தனியாக வாழ்ந்து வந்தார் அதன் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்த இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை ரம்பா  சோசியல் மீடியாவில் தனது மூத்த மகள் லாவண்யாவின் போட்டோவை பகிர்ந்துக் உள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் முகபாவனையை பார்த்துவிட்டு ரம்பாவை போல இருப்பதாக பேசி வருகின்றனர். இவ்வாறு மிகவும் அழகாக இருக்கும் தனது மகளை ரம்பா திரைப்படங்களில் நடிக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment