சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாக ராமகிருஷ்ணன் போட்ட மீம்ஸ்!!. வைரலாகும் வீடியோ.

0

actress ramayakrishnan ipl memes video:கொரோனா ஊரடங்கு காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா நடக்காதா என உலகெங்கும் உள்ள ரசிகர்கள் தவித்து வந்தனர். அதனைத் தவிர்க்கும் வண்ணம் இன்று ஐபிஎல் போட்டி துபாயில் தொடங்கவுள்ளது.

உலகளவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒன்றாக கலந்து இன்று குதுகலமாக அபுதாபியில் ஐபிஎல் தொடங்க உள்ளது. முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான். ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக அவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆல்பம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

மேலும் மற்றொரு தீவிர ரசிகையான நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக பாகுபலி மீம்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். பாகுபலி பட காட்சிகள் மற்றும் ரஜினியின் சந்திரமுகி காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்ட ஐபிஎல் மீம்ஸ் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரின் டுவிட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது வீடியோ. இதோ அந்த வீடியோ.