விஜய்யுடன் ‘மதுர’ படத்தில் நடித்த நடிகையா இவர்.? வைரலாகும் புகைப்படம்..

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தொடர்ந்து சரியான பண வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர்கள் பலர் இருக்கின்றார்கள் மேலும் இன்னும் பலர் திருமணம் செய்துக் கொண்ட பிறகும் தொடர்ந்து சினிமாவில் உயர்ந்து வருகின்றனர் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ரக்ஷிதா.

இவர் விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த மதுர திரைப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் உடன் இணைந்து ரக்ஷிதா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தினை ஆர்.மாதேஷ் இயக்கியிருந்த நிலையில் வெளியாகி இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்பொழுது நடிகை ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் குடும்பப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மதுர பட நடிகையாய் இவர் என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். நடிகை ரக்ஷிதா தமிழ், தெலுங்கு, மலையாளம் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வந்த இவர் பிறகு கன்னடத்தில் சில திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார். இப்படிப்பட்ட நிலையில் பிரபல கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார்.

rakshitha
rakshitha

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் இணைந்து பணியாற்ற தொடங்கினார். அந்த வகையில் இரண்டு வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரக்ஷிதா தற்பொழுது வரையிலும் மூன்று கட்சி மாறி உள்ளார் அப்படி கடைசியாக இவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

rakshitha 1
rakshitha 1

இப்படிப்பட்ட நிலையில் நடிகை ரக்ஷிதாவின் குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பற்றிய வருகிறது. மேலும் மதுர படத்தில் பார்த்ததைவிட மொத்தமாக இவர் மாறி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Leave a Comment