விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் சரவணன் மீனாட்சி தொடர் அதில் நடிகையாக நடித்து மக்களிடம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்ஷிதா.பின்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் செந்திலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்பொழுது வருத்தமான செய்தி என்னவென்றால் சில நாட்களாக சீரியலில் இருக்கும் பிரபலங்கள் ஒவ்வொருவராக வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் வந்த உடன் சீரியலில் இருந்து விலகி விடுகின்றன. சமீபத்தில் கூட பாரதிகண்ணம்மா தொடரில் துணை நடிகராக நடித்து வந்த அகிலன் என்பவர் டாப் ஹீரோயின் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஆனால் தற்போது சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் நடிகைகளும் சீரியலிருந்து விலகுகின்றன.அதில் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் நடிகையாக நடித்து வரும் ரோஷினி பட வாய்ப்பின் காரணமாக விளங்குவதாக தகவல்கள் வெளியாகின மற்றும் காற்றுக்கென்ன வேலி நடிகர் தர்ஷன் போன்ற முக்கிய நடிகர் நடிகைகள் வெளியேறின.
தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் துணை நடிகராக கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராஜீ ஜெயமோகன் சின்னத்திரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகி சென்று விட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மற்றும் மக்களை கவர்ந்து செம்மையாக விளையாண்டு வருகிறார்.
தற்போது மற்றொரு கதாபாத்திரமும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரக்ஷிதா இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளாராம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் போட்டு பாய் மஹா என பதிவு செய்து உறுதி படுத்தியுள்ளார்.