சூர்யா மற்றும் கார்த்தி ஒரே நேரத்தில் உஷார் செய்த நடிகை.! எங்கேயோ மச்சம் இருக்கு போல

0

வாரிசு நடிகர்களாக அறிமுகமான பலர் தற்போது சினிமாவில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் தள்ளாடி வருகிறார்கள். ஆனால் அண்ணன் தம்பிகளான கார்த்திக் மற்றும் சூர்யா இருவரும் வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி தற்போது வரையிலும் வெற்றிகரமான பாதையை நோக்கி பயணித்து வருகிறார்கள்.

சூர்யா நடிப்பில் சில காலங்களாக வெளிவந்த திரை படங்கள் தோல்வியை அடைந்தது. அதில் என்ஜிகே திரைப்படத்தில் இவர் நடித்தது சரியில்லை என்று ரசிகர் ஒருவர் கூறியிருந்தார்.அதற்கு சூர்யா நான் நடிக்க கற்றுக் கொள்கிறேன் என்று அந்த ரசிகர்களுக்கு பதில் அளித்து இருந்தார்.

அதையெல்லாம் சரி செய்யும் வகையில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் வெற்றிகரமான திரைப்படமாக அமைந்தது.  இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் தோல்வி அடையாமல் தற்போது வரை மிகவும் வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக சுல்தான் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற கர்ணன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.  இவர் இளம் நடிகையாக இருந்தாலும் கர்ணன் திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு கார்த்திக் நடித்து வரும் சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அதன் பிறகு சூர்யா நடித்து வரும் கூட்டத்தில் ஒருவன் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் சூர்யாவை வைத்து பெயரிடாத ஒரு திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளார்.

இவ்வாறு அறிமுகமான 2,3 திரைப்படங்களிலேயே தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.  எனவே தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளில் முதல் அனைவரும் இவரின் மீது பொறாமையில் இருந்து வருகிறார்கள்.  ரஜிஷா விஜயன் மலையாள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.