நடிகை ராதிகா தனது தந்தை எம் ஆர் ராதாவின் நினைவு தினதயொட்டி அவருடன் இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுஉள்ளார்.

radhika
radhika

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக நடித்த நடிகர்களின் வாரிசுகள் சினிமா உலகில் தற்பொழுது நடித்து வருவது வழக்கம். ஆனால் அத்தகைய நடிகர்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைய முடியாமல் பாதியிலேயே திணறி ஓடுவதை நாம் பார்த்துள்ளோம்.

ஆனால் ஒரு சில நடிகர் நடிகைகளோ தான் ஒரு வாரிசு நடிகை என்பதை துளி கூட வெளியே காட்டாமல் சினிமா உலகில் தனது திறமையின் மூலம் முன்னேறி சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்வது உண்டு அப்படி சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்தவர்கள் தான் எம்ஆர் ராதாவின் மகளான ராதிகா.

இவர் தமிழ் சினிமா உலகில் தற்போது வரையிலும் நடித்து கொண்டு வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இவர் வெள்ளித்திரையின் தாண்டி சின்னத்திரையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் தனது தந்தையின் நினைவு நாளை ஒட்டி நடிகை ராதிகா தனது தந்தையுடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படங்கள் சிலவற்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது லைக்குகளை அள்ளி வருகிறது.