தமிழ் சினிமாவில் எப்படி ரஜினி கமல் போன்றவர்களை தவிர்க்க முடியாதோ அதுபோல நடிகைகளில் ராதிகாவை தவிர்க்கவே முடியாது. 70 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் நடித்து வருகிறார் நடிகை ராதிகா. இவரது அப்பா அண்ணன் இருவருமே சினிமா பிரபலங்கள் அவரை தொடர்ந்து இவருக்கும் சினிமா ரத்தத்திலேயே ஊறி இருந்ததால் இளம் வயதிலேயே சினிமா உலகில் நடிக்கத் தொடங்கினார்.
படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, விஜய், கமல் போன்றவர்களுடன் நடித்து அசத்தினார். காலங்கள் ஓடிக் கொண்டே இருப்பதால் நடிகை ராதிகாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் கிடைக்கின்ற கதாபாத்திரங்களில் எல்லாத்துலயும் சூப்பராக அடித்து மிரட்டி வருகிறார்
அதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக தற்போது ராதிகா வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு இவருக்கு அமோக ஆண்டாக அமைந்துள்ளது. அந்த அளவிற்கு தற்போது பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் சித்தி, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் வெளியான அனபெல்லா, சேதுபதி படத்தில் நடித்தார்.
அந்தப்படம் திரையரங்கில் வெளியானது அதனைத் தொடர்ந்து இவர் அதோ அந்த நாட்கள், துருவ நட்சத்திரம் ஜெயில், பிறந்தாள் பராசக்தி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இதில் சில திரைப்படமும் இதுவரை வெளியாகமல் இருக்கிறது.
ராதிகா சினிமாவையும் தாண்டி சின்னத்திரையிலும் வலம்வந்தார் அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் சீரியல்களில் நடித்தும் அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படியும் மீடியா உலகை ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ராதிகா நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

