பொதுவாக பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் முகம் காட்டிவிட்டால் எப்படியும் பிரபலமாகி விடலாம் என்ற எண்ணம் பலரையும் ஏங்க வைத்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளர் முதல் சீரியல் நடிகர்கள் வரை அனைவருமே தற்போது வெள்ளித்திரையில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதற்கு எடுத்துக்காட்டாக நடிகர் சிவகார்த்திகேயனையும் சந்தானத்தையும் கூறலாம் இந்நிலையில் தற்போது சிவாங்கியும் திரையுலகில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் ரச்சித்தா மகாலட்சுமி.
இவர் இந்த சீரியலுக்கு முன்பாகவே சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்போது இவர் நடிக்கும் நாம் இருவர்நமக்கு இருவர் என்ற சீரியல் ஆனது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் இந்த சீரியலில் இருந்து தற்போது ரச்சிதா விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏனென்றால் நமது நடிகை ரஞ்சிதாவுக்கு தற்போது கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாம் இதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை குருபிரசாத் அவர்கள் இயக்க உள்ளார் மேலும் அவர் தான் இந்த திரைப்படத்தில் நாயகனாகவும் நடிக்கிறாராம் இவருக்கு கதாநாயகியாக ரட்சிதா நடிக்கப்போவது காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக கூறுகிறார்கள் ஆனால் ரட்சித்தா தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
பொதுவாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் ஆனது பிரபலமாக ரசிகர்கள் பார்ப்பதற்கு ரச்சித்தா முக்கிய பங்கு வகிக்கிறார் ஏனெனில் அவர் நடிக்கும் அந்த ரோலில் வேறு எந்த ஒரு நடிகையும் நடிக்க வைத்தாலும் அது செல்லுபடியாகாது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்
ratchitha pic.twitter.com/iN4rZUk77X
— Tamil360Newz (@tamil360newz) August 12, 2021
இந்நிலையில் ரட்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் புல்லட்டு ஓட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
