என்ஜாய் எஞ்சாமி பாட்டுக்கு செம்ம குத்து குத்திய நடிகை ராசி கண்ணா!! வைரலாகும் வீடியோ.

சந்தோஷ் நாராயணனின் என்ஜாய் என்ஜாமி என்ற பாடல் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த பாடல் வந்த சில நாட்களிலேயே அதிக அளவில் ரீச்சாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாடலை சந்தோஷ் நாராயணன் மகள் தீ மற்றும் அறிவு இணைந்து பாடி நடனமாடியுள்ளனர். இந்த பாடல் யூ டியூபில் வெளியாகி உள்ளன. இந்த பாடலுக்கு கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என நடனமாடி வீடியோவை சமூக வலைத்தளமான ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகையான ராஷி கண்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் மற்றும் சுந்தர் சி யுடன் இணைந்து அரண்மனை போன்ற திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் இந்த என்ஜாய் என்ஜாமி என்ற பாடலுக்கு தனது நடன பயிற்சியாளர் உடன் இணைந்து நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த பாடல் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 3 லட்சத்திற்கும் மேலான ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக்குகளைக் குவித்து வருகிறது.

இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment