தமிழ்,தெலுங்கு, மலையாளம் என ஏராளமான திரைப்படங்களில் நடிக்க உள்ள ராசி கண்ணா.! மொத்தம் எத்தனை திரைப்படங்கள் தெரியுமா.? தெரிந்தால் அளண்டு போயிடுவிங்க.!

0

நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா முரளி போன்ற ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளின் நடிப்பில் திரில்லர் படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இமைக்கா நொடிகள்.இத்திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்றது.இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா.

இதனைத்தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து அடங்க மறு, சங்க தமிழன் போன்ற தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமடைந்தாலும் சொல்லும் அளவிற்கு திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது என்று கூற முடியாது.

ராசி கண்ணாவிற்க்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழில் இவர் ஆர்யாவுடன் இணைந்து  அரண்மனை 3, விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக்  தர்பார், ஜீவாவுடன் இணைந்து மேதாவி, கார்த்திக்குடன் சர்தார்,சித்தார்த்துடன் சைத்தான் கா பச்சா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

rashi kanna 2
rashi kanna 2

தமிழை தொடர்ந்து மலையாளத்தில் பிராமம், தெலுங்கில் பக்கா கமர்ஷியல், தேங்க்யூ ஹிந்தியில் டீகே இயக்கம் வெப் சீரியல் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு அனுஷ்கா, சமந்தா, நயன்தாரா, போன்ற முன்னணி நடிகர்கள் அளவிற்கு வளர்ந்துள்ள இவர் இவர்களைப் போலவே நானும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடிப்பதற்காக ஆர்வமாக உள்ளேன் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார்.