நடிகை ராஷி கண்ணா தனது காதலர் மற்றும் திருமணம் பற்றிக் கூரியதை கேட்ட ரசிகர்கள். !! அட அப்ப பிரச்சனை இல்ல போங்க..

0

actress raashi answer about her love and marriage: இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகைராஷி கண்ணா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன் போன்ற பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 யில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ராஷிகண்ணாவிடம் உங்களது திருமணம், காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.

உடனே அதற்கு பதிலளித்த ராஷி கண்ணா அவர்கள் திரை உலகில் எத்தனையோ நடிகைகள் இருக்க ஏன் என்னிடம் மட்டும் திருமணம் காதல் பற்றி கேட்கிறீர்கள் நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை ஒருவேலை காதலித்தால் அவரை என் பெற்றோர் முன் நிறுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி பிறகு தான் மணப்பேன் என கூறியுள்ளார்.