சீரியலில் சிறந்த நடிப்பையும், அழகையும் காட்டி வலம் வரும் பிரபலங்களை பார்க்கும் போதே தெரியும் இவர் வெள்ளித்திரைக்கு தகுதியானவர் என்று அந்த வகையில் சீரியலில் பல்வேறு புதுமுக பிரபலங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடிக்கின்றன.
அப்படி லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்துள்ளவர் தான் நடிகை பிரியங்கா நல்கரி. சன் டிவி தொலைக்காட்சி யில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.
இதில் நடிப்பவர்கள் சிறப்பாக நடிப்பதால் இல்லத்தரசிகளையும் தாண்டி ரசிகர்களும் கூட இந்த சீரியலை பார்த்து கொண்டாடி வருகின்றனர் முக்கிய கதாபாத்திரத்தில் ரோஜாவாக பிரியங்க நல்கரி நடித்து வருகிறார் இவரது பேச்சுத் திறமை மற்றும் நடிப்பு ஆகியவை போற்றும் வகையில் இருப்பதால் இந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெற்ற டிஆர்பியை உச்சத்தில் இருக்கிறது.
ரோஜா சீரியலையும் தாண்டி பிரியங்கா நல்கரி அவ்வபொழுது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் மற்றும் சிறப்பான பாடலுக்கு குத்தாட்டம் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரைப் பின்தொடரும் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பிரியங்கா நல்கரி தனது அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டையும் குவித்து வருகின்றனர். இதோ சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம்.
