மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த டாப் பிரபலங்கள் தனது தொழிலை தாண்டியும் மற்றவற்றிலும் அதிக பணம் சம்பாதிக்கின்றனர் அந்த வகையில் பிரபலங்கள் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலமும் அதிகமாக சம்பாதித்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது அதில் முதலிடத்தில் இருப்பவர் கால்பந்து வீரர் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ வெளியிடும் ஸ்பான்சர் ஒன்றுக்காக 11.50 கோடி வருமானம் கிடைக்கிறது.
அவரை தொடர்ந்து பிரபல நட்சத்திர நடிகரும் குத்துச்சண்டை வீரருமான டுவைன் ஜான்சன், மெஸ்சி பெற்ற பிரபலங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர் இப்படி போய்க் கொண்டிருந்தாலும் இந்திய லிஸ்டில் 19வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி தன்வசப்படுத்தி உள்ளார்.
அவரை தொடர்ந்து 27 வது இடத்தில் பிரியங்கா சோப்ரா இருக்கிறார் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டா பக்கத்தில் பகரும் ஒவ்வொரு ஸ்பான்சர் பதிவுக்கும் சுமார் 3 கோடி வருமானம் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. சினிமாவைத் தாண்டி இப்படி சம்பாதிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ள நிலையில் இது அவருக்கு குறைந்த வருமானமே என ஒரு தரப்பு ரசிகர்களும் கூறி வருகின்றனர் எது எப்படியோ இதிலும் காசு கிடைக்கிறது என சந்தோஷத்தில் இருந்து வருகிறாராம் எங்க சோப்ரா.